திருத்தங்கல் எட்டு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திர பாலாஜி கோயில் , மசூதி , தேவாலயம் உள்ளிட்ட திருப்பணிகளுக்கும் திருவிழாக்களுக்கும் நிதி உதவி வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்ற தொகுதி திருத்தங்கல் எட்டு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு: ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில் திருத்தங்கல் பாண்டியன்நகர், இந்திராநகர் வாழ் முக்குலத்தோர் நலச்சங்கம் நடத்தும் பங்குனி பொங்கல் திருவிழாவிற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திருத்தங்களில் உள்ள தனது இல்லத்தில் வைத்து ரூபாய் 50ஆயிரம் நிதியுதவி வழங்கினார். நிதி உதவி பெற்றுக்கொண்ட விழா ஏற்பாட்டளர்கள் ராஜேந்திரபாலாஜிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.