சாத்தூர் அருகே குடும்ப தகராறில் கணவன் தற்கொலை. உடலை கைப்பற்றி போலீஸார்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் அடுத்த மேட்டமலை பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி 23. கட்டிட தொழிலாளியான இவர், சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்த பூமாரி என்ற பெண்ணை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு
திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். மேலும்
கணவன், மனைவி இருவரிடையே மார்ச் 25ல் லோன் வாங்குவது குறித்து ஏற்பட்ட தகராறில் மனைவி பூமாரி தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஏப் 1 நேற்று இரவு கருப்பசாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பாக காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு சாத்துார் போலீசார் விரைந்து சென்று இறந்தவர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.