விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே நடந்த சாலை விபத்தில் மரணமடைந்தஅதிமுக கட்சியின் நிர்வாகி பாலமுருகன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்
கே. டி. ராஜேந்திரபாலாஜி.
சிவகாசி அடுத்த சுக்கிரவார்பட்டி பகுதியை சேர்ந்த அ. தி. மு. க. நிர்வாகி காக்கா பாலமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலை விபத்தில் இறந்தார். மேலும் இறந்த பாலமுருகன் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்
கே. டி. ராஜேந்திரபாலாஜி, பாலமுருகன் மகள்கள் ஜெயபிரியா, சுகப்பிரியா ஆகிய இருவரின் கல்வி மேல் படிப்பு செலவுக்கு ரூ. 36 ஆயிரம் வழங்கினார். அதே போல் சுக்கிரவார்பட்டி கலுங்கு ஓடை பகுதியை சேர்ந்த அ. தி. மு. க. நிர்வாகி ஜெயம் சாலை விபத்தில் இறந்த நிலையில் அவரது குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறிய கே. டி. ராஜேந்திரபாலாஜி அவரது குடும்பத்துக்கு ரூ. 15 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட கழக துணை செயலாளா் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், ஒன்றிய கழக செயலாளர் லயன் லட்சுமிநாராயணன், பகுதி கழக செயலாளர்கள் சரவணக்குமார், கிருஷ்ணமூர்த்தி, தொகுதி கருப்பசாமிபாண்டியன், ஷாம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.