விருதுநகர்: இருசக்கர வாகனம் மோதி ஒருவர் காயம்

80பார்த்தது
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி வயது 78. இவர் சிவகாசியில் உள்ள அச்சு ஆபிசில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இவர் வேலைக்குச் செல்வதற்காக சிவகாசியிலிருந்து புறப்பட்டு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஸ்ரீனிவாசன் மணிவண்ணன் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பாண்டி காயம் அடைந்த நிலையில், விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாண்டி அளித்த புகார் அடிப்படையில் திருத்தங்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி