விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து நிலையத்தின் முன்பாக, சைபர் குற்றங்கள் தொடர்பாக நடனமாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவிகள். தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவகாசி பேருந்து நிலையத்தில் வஸ்திரா கண் மருத்துவக் கல்லூரி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சர்க்கரை நோயால் ஏற்படும் விழித்திரை நோய் தொடர்பாகவும், சைபர் குற்றங்கள் தொடர்பாகவும் கல்லூரி மாணவிகள் நடனமாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் திரளான மக்கள் நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.