சிவகாசி: சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் முற்றுகை போராட்டம்...

67பார்த்தது
சிவகாசியில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்.
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 1000 மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மாவட்ட நிர்வாகம், மத்திய வெடி பொருள் கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் உரிமத்தோடு, பல்வேறு அரசு துறைமுலம் அனுமதி பெற்று செயல்பட்டு வருகிறது. மேலும் பட்டாசு தொழிற்சாலை மூலம் நேரடியாகவும்,
மறைமுகமாகவும் லட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர். மேலும் விபத்துகளை தடுக்க,
தமிழக அரசு சார்பில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், வருவாய், காவல், தீயணைப்பு ஆகிய உள்ளிட்ட துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து ஆய்வு குழுக்கள் அமைத்து, ஒவ்வொரு நாளும் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு விதிமுறைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. மேலும் வெம்பக்கோட்டை தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தும் அரசுத் துறைகளின் அலுவலர்கள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு வெம்பக்கோட்டையிலுள்ள பட்டாசு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கணக்கானோர் தங்களது பட்டாசு ஆலைகளை கதவடைப்பு செய்து சிவகாசியிலுள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தை சாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் தலைமையில் முற்றுகையிட்டு நடத்தினர். போராட்டத்தில் ஏராளமான பட்டாசு உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி