இரு டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலி

76பார்த்தது
இரு டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் பலி சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு


விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியைச் சார்ந்தவர் சேது ராஜ் வயது 47 இவர் சிவகாசியில் உள்ள தனியார் உணவகத்தை வேலை செய்து வருவதாகவும் வேலை முடித்துவிட்டு சிவகாசி திருத்தங்கள் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது தங்க மாரியப்பன் என்பவர் இருசக்கர வாகனத்தை அதிவேகமாக அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து சேதுராஜ் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார் இந்த விபத்தில் சேதுராஜ் காயமடைந்த நிலையில் காயத்துடன் மீட்க பட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் அங்கு சிகிச்சையில் இருந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் இந்த விபத்து குறித்து உயிர் இழந்தவரின் உறவினர் ஜெயா என்பவர் அளித்த புகார் அடிப்படையில் சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி