டிக்கெட் முன்பதிவில் "லியோ" திரைப்படத்தின் சாதனையை மோகன்லாலின் "எம்புரான்" படம் முறியடித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவான எம்புரான் வரும் 27ம் தேதி வெளியாகயுள்ளது. இந்நிலையில், முன்பதிவு தொடங்கிய ஒரு மணிநேரத்தில் 96.14 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்ததோடு விஜய்யின் லியோ பட டிக்கெட் சாதனையை முறியடித்துள்ளது. மேலும், முதல் நாளில் மட்டும் இந்தியாவில் ரூ.10 கோடி குவித்த எம்புரான் உலகளவில் ரூ.12 கோடியை தாண்டி டிக்கெட் முன்பதிவில் வசூலை குவித்து வருகிறது.