IPL2025: நாளை நடக்கும் போட்டியில் RCB-யின் நட்சத்திர வீரர் விராட் கோலி 38 ரன் அடித்தால் KKR அணிக்கு எதிராக ஆயிரம் ரன்களை கடப்பார். இதன்மூலம், 4 அணிகளுக்கு எதிராக ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். இதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 1,053 ரன்களும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 1,057 ரன்களும், பஞ்சாப் அணிக்கு எதிராக 1,030 ரன்களும் அடித்துள்ளார்.