தொகுதி மறுவரை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் சென்னைக்கு வருகை தந்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச்.22) நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க 7 மாநில முதல்வர்களுக்கு திமுக அழைப்பு விடுத்தது. இக்கூட்டத்தில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.