மரக்காணம்: விஷம் குடித்த பெண் உயிரிழப்பு
மரக்காணம் வட்டத்துக்குள்பட்ட கோட்டிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சோ்ந்த குமாா் மனைவி மலா் (50). இவா், நீண்ட நாள்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மலா் அக். 14- ஆம் தேதி வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்ததாகத் தெரிகிறது. உடனே, உறவினா்கள் அவரை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த மலா், சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.