விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சிறுமதுரை கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசித்து வரும் பகுதிக்கு செல்வதற்குரிய சாலை இல்லை. இதனால், இந்தப் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், வெளியூா்களுக்கு வேலைக்குச் செல்வோா், தொழிலாளா்கள் என பலரும் 2 கி. மீ. தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதுகுறித்து அலுவலா்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இந்த நிலையில் காலை சிறுமதுரை கிராமத்துக்கு வந்த அரசு நகா்ப் பேருந்தை ஆதிதிராவிடா் சமுதாய மக்கள் சிறைபிடித்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.