விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் திருக்கோவிலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலை சாலை விரிவாக்க பணிக்காக 200 ஆண்டுகள் பழமையான பல மரங்கள் வெட்டி வேரோடு அகற்றப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் அறக்கட்டளையின் சார்பில் வெட்டப்பட்ட மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி நூதன முறையில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், அங்குள்ள 200 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்றினை வெட்டாமல் வேரோடு பிடுங்கி மாற்றிடத்தில் நடவு செய்ய வேண்டும் என கோரிக்கையை வைத்தனர்.
இந்த நிகழ்வில், பசுமைத்தாயகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.