மரக்காணம்: பெயிண்டா் கொலை வழக்கு..2 பேர் கைது

52பார்த்தது
மரக்காணம்: பெயிண்டா் கொலை வழக்கு..2 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேட்டையை அடுத்த கொண்டாகரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயபால் மகன் ஜெயசீலன்(42). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கந்தாடு பகுதியில் தனியார் பள்ளி அருகே முள்புதரில் கழுத்தில் வெட்டுக் காயங்களுடன் பிப். 20-ஆம் தேதி இறந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த மரக்காணம் போலீசார் நிகழ்விடம் சென்று, சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயசீலன் முன்விரோதம் காரணமாக தனது உறவினரால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் மரக்காணம் கந்தாடு, பிளாரிமேடு, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த எட்டியான் மகன் கரண்குமார்(26), மரக்காணம் சம்புவெளித் தெருவைச் சேர்ந்த வேலு மகன் சீத்தாராமன்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி