மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிறுவன்

74பார்த்தது
மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சிறுவன்
விழுப்புரம்: அரகண்டநல்லூர் அருகே சட்ட விரோதமாக பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 15 வயது சிறுவன் உயிரிழந்தார். நவீன்ராஜ், தனது நண்பர் கோபியுடன் மாடு மேய்ச்சலுக்கு சென்றபோது, இருவரும் மின்வேலியில் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். அவர்களை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் நவீன்ராஜ் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கோபி சிகிச்சையில் உள்ளார், போலீஸ் விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி