பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பாலமுருகன், 10; ரெட்டணை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1:00 மணிக்கு கோபாலபுரம் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கினார். உடன், அருகில் இருந்தவர்கள், சிறுவனை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் சிறுவன் இறந்தார். இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.