பெங்களூருவில் பைக் பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை அமர வைத்து கட்டிப் பிடித்தபடி இளைஞர் சென்ற வீடியோ காட்சி வைரலாகியுள்ளது. ஆபத்தான முறையில் பைக்கில் செல்வதை காட்டும் இந்த வீடியோ சாலை பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை அமர வைத்து பைக் ஓட்டும் இளைஞர் ஹெல்மெட்டும் அணியவில்லை. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க பலரும் கோரியுள்ளனர்.