விக்கிரவாண்டி அருகே பேக்கரி, டீ கடையில் அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரி கொளஞ்சி உள்ளிட்டோர் விக்கிரவாண்டியில் உள்ள பேக்கரி, டீ கடை, சூரப்பட்டிலுள்ள பிரியாணிகடையில் ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பேக்கரிக்கு 5 ஆயிரம் அபராதம், பிரியாணி கடைக்கு 3 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், டீ கடைக்கு நோட்டீஸ் வழங்கினர்.