திண்டிவனம் அருகே தங்கள் பகுதிக்கு தனியாக நியாய விலை கடை வேண்டும் என்று ஊராட்சி வார்டு உறுப்பினர் தலைமையில் பூட்டியிருந்த நியாய விலை கடைக்கு மேலும் ஒரு பூட்டு போட்டு பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலத்தில் உள்ள கீழ்மயிலம் பகுதியில் 835 குடும்ப அட்டைகளுடன் கொண்ட நியாய விலை கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அந்த நியாய விலை கடையை மயிலம் கிராமம் மலையடிவாரம் பகுதியில் 225 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆதரவாக ராஜி என்பவர் தங்கள் பகுதிக்கு தனியாக நியாய விலை கடை வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து பூட்டு போட்டிருந்த நியாய விலை கடைக்கு மறுபடியும் பூட்டு போட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலர் உஷாராணி பொதுமக்களிடம் தங்கள் பகுதிக்கு நியாய விலை கடை திறக்க மேல் அதிகாரிகள் தொடர்பு கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் அனைவரும் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தங்கள் பகுதிக்கு தனி நியாய விலை கடை அமைக்கப்பட வேண்டும் என பூட்டிய கடைக்கு மீண்டும் பொதுமக்கள் பூட்டு போட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.