மயிலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பசு மாடு குறுக்கிட்டதால் அடுத்தடுத்த நான்கு கார்கள் ஒன்றன்பின் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தென் பசார் பகுதியில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடுமுறை தினம் என்பதால் அதிக அளவில் வாகன போக்குவரத்து காணப்பட்டது. விழுப்புரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற கார் தென்பசார் பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அப்பகுதியில் பசுமாடு ஒன்று குறுக்கிட்டுள்ளது. இதனை சற்று எதிர்ப்பார்க்காத கார் ஓட்டுநர் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும் கட்டுப்பாட்டை இழந்த கார் பசு மாடு மீது மோதி நின்றது. அப்போது அந்தக் காருக்கு பின்னால் வந்த மூன்று கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு கார்கள் முற்றிலுமாக சேதம் அடைந்தது.