இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை ; போலீஸ் விசாரணை

57பார்த்தது
திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதி சேர்ந்த ஏழுமலை என்பவரது மகன் பிரசாந்த் என்கின்ற சண்முகசுந்தரம் (30). வெல்டராக பணிபுரிந்து வரும் இவரும், உறவினரான பக்கத்து வீட்டை சேர்ந்த குப்புசாமி என்பவரது மகள் விஜயலட்சுமி என்கின்ற வேண்டா (28) என்பவரும் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 மற்றும் 6 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவி இடையே கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக சண்டை சச்சரவு இருந்துள்ளது. பலமுறை பெரியவர்கள் சமாதானம் பேசி குடும்பம் நடத்த வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை வெல்டிங் வேலை காரணமாக ஆலகிராமம் சென்ற சண்முகசுந்தரத்திற்கு விஜயலட்சுமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வீட்டிற்கு வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு வந்த சண்முகசுந்தரம் வீட்டின் மேலே உள்ள இரும்பில் தூக்கில் தொங்கியபடி விஜயலட்சுமி இருந்ததாக கூறப்படுகிறது. அதைப் பார்த்த சண்முகசுந்தரம் கூச்சலிட்டுள்ளார். உடனே விஜயலட்சுமியை காப்பாற்றி தென்பசார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை அடுத்து விஜயலட்சுமி உடலை வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி