விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தமிழக அரசின் குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்கும் பொருட்டு கலைஞரின் கனவு திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மயிலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் 238 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று மயிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 79 பயனாளிகளுக்கு "கலைஞரின் கனவு திட்டம்" வீடு கட்டுவதற்கான பணி ஆணையினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.
இந்த நிகழ்வில் மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமதாஸ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர். மாசிலாமணி, மயிலம் ஒன்றிய செயலாளர் மணிமாறன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.