ஒலக்கூர் மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் கூட்டம்

53பார்த்தது
மயிலம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒலக்கூர் மேற்கு ஒன்றிய திமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் அமராபதி தலைமை தாங்கினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் காளி, சுப்பிரமணியன், அன்பரசி ஜெயப்பிரகாஷ், ஒன்றிய பொருளாளர் திருஞானசம்மந்தன், மாவட்ட பிரதிநிதிகள் ஹரிகிருஷ்ணன், காளி, மணி, மாவட்ட கவுன்சிலர் மனோ சித்ரா ராஜேஸ்வரன், ஒலக்கூர் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரர் செஞ்சி மஸ்தான், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முப்பெரும் விழா மாவட்ட முழுவதும் கொண்டாடி கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி பல்வேறு நலத்திட்டங்கள் வழங்குவது, கட்சியின் ஆக்க பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் இரா. மாசிலாமணி, வழக்கறிஞர் இரா. சேதுநாதன், ஒலக்கூர் ஒன்றிய குழு தலைவர் சொக்கலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீடூர் ரவி, சாந்தி ஏழுமலை உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒலக்கூர் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி