சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுப்பால் "டிராபிக் ஜாம்"

70பார்த்தது
தொடர் விடுமுறைக்காக தென் மாவட்டங்களுக்கு சென்று திரும்பிய வாகனங்களால் ஓங்கூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வார இறுதி நாளான சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அதிக அளவிலான வாகனங்கள் செல்வது வழக்கம். ஆனால் சென்ற 15ம் தேதி வியாழக்கிழமை சுதந்திர தின விழா விடுமுறை என்பதால் அதனை தொடர்ந்து வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு தினங்கள் பெரும்பாலான மாணவ மாணவிகள் சென்னையில் பணிபுரிபவர் என அனைவரும் தென் மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்தனர். அனைவரும் இன்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் ஒட்டுமொத்தமாக சென்னை நோக்கி படையெடுத்ததால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மிகுதியாக காணப்பட்டது. அதேபோல் விழுப்புரம் மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து காணப்பட்டன.

தொடர்புடைய செய்தி