இந்தியாவில் ஒவ்வொரு நாளும் புதுவிதமாக சைபர் குற்றங்கள் நடக்கின்றன. இந்த லிங்கில் சென்று பதிவு செய்யுங்கள் என்பதில் தொடங்கி, பரிசு, சலுகை அறிவிப்பு, டிஜிட்டல் அரெஸ்ட் என பட்டியல் நீள்கிறது. இந்நிலையில், ஒடிசி டெக்னலாஜிஸ் நிறுவனம், சைபர் மோசடிகளை தவிர்க்க புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளது. பிளே ஸ்டோரில் உள்ள ஸார்கீசைன் மெயில், ஸார்கீசைன் ஸ்பாட் செயலிகள், சைபர் குற்றத்தை தடுக்க உதவுவதாக, ஒடிசி நிறுவன இயக்குனர் பி.ராபர்ட் ராஜா தெரிவித்தார்.