
விழுப்புரம் மாவட்டத்தில் 2 டோல்கேட்களில் கட்டண உயர்வு
தமிழகத்தில் உள்ள டோல்கேட்களில், நகாய் பரிந்துரையின்பேரில், ஆண்டுக்கு ஒருமுறை கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாநிலத்தில் மொத்தமுள்ள 78 டோல்கேட்களில், இந்தாண்டு (2025-26) கட்டண உயர்வாக 46 டோல் கேட்களில் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல், கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையில், விழுப்புரம் அடுத்த தென்னமாதேவி டோல்கேட்டிலும், சென்னை நெடுஞ்சாலையில், திண்டிவனம் - அச்சரப்பாக்கம் அருகே ஓங்கூர் டோல்கேட்டிலும் 5 சதவீதம் அளவில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.