வெளியூர் பயணங்களில், விடுதியில் தங்கும் பெண்கள், தம்பதிகளுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது Spy கேமிரா தொல்லை. இவ்வகை ரகசிய கேமிராக்கள், சமூக விரோதிகளால் பயன்படுத்தப்படுகிறது. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்கள், ஸ்பை கேமிரா டிடெக்டர் வாங்குவது நல்லது. எளிய முறையில் ஸ்பை கேமிராவை கண்டறிய, அறையை வெளிச்சம் வராமல் மூடிவிட்டு, கேமிரா லென்ஸ், அதில் உள்ள வெளிச்சம் போன்றவை தென்படுகிறதா? என சோதிக்கலாம். சம்பந்தமே இல்லாத வைபை, புளூடூத் இணைப்புகளையும் சோதிக்க வேண்டும்.