செஞ்சி அருகே அதிகாலையிலே கோர விபத்து மூன்று பேர் பலி

68பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்துள்ள, வல்லம் அருகே அதிகாலையிலே எதிரே வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ராஜாபுலியூர் கிராமத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு(50), பச்சையம்மாள்(45), கோபிகா(19) உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் துக்க நிகழ்விற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தபோது அரசு பேருந்து மோதி விபத்தில் சிக்கி உள்ளதாக போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிகின்றது. மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி