
அவலூர்பேட்டை அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு
அவலுார்பேட்டை அடுத்த வடுகப்பூண்டியை சேர்ந்தவர் சரவணன், 49; விவசாயியான, இவர் நேற்று முன்தினம் இரவு அவலுார்பேட்டையில் மங்கலம் சாலை பெட்ரோல் பங்கிலிருந்து பெட்ரோல் வாங்கிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து வந்த பைக் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.