சென்னை விருகம்பாக்கத்தில் தலையில் அரிவாளால் வெட்டி வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வெங்கடேசன் (43). இறந்து கிடந்த இடம் முழுவதும் ரத்தம் உறைந்து போயுள்ளது. கொலை செய்யப்பட்டு சில தினங்கள் ஆனதால் அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டுள்ளது. வெங்கடேசனின் நண்பர் கார்த்திக் என்பவரை போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.