சமீப காலமாக சமூக வலைதள பக்கங்களை எட்டி பார்த்தால் ஒரே மாதிரியான அனிமேஷன் படங்கள் வெளியாகி டிரெண்டிங்கில் அசத்தி வருகிறது. விளையாட்டு, அரசியல், சினிமா பிரபலங்கள் என பலரின் அனிமேஷன் படங்கள் அதிகம் பேரால் விரும்பப்பட்டு பின்னர் பகிரப்பட்டும் வருகின்றன. இந்த வகை படங்கள் ஜப்பானின் ஜிப்லி ஸ்டுடியோ பாணியை சேர்ந்தவை. இந்நிலையில், ஜிப்லியில் அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ் இணைந்துள்ளார்.