அவலுார்பேட்டை கடைவீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். ஒன்றிய சேர்மன் கண்மணி, செயலாளர் நெடுஞ்செழியன், துணை சேர்மன் விஜயலட்சுமி, மாவட்ட கவுன்சிலர்கள் சாந்தி, செல்வி ராமசரவணன், ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி தலைவர் செல்வம், சம்பத், மணியரசன், பாலமுருகன் உட்பட பலர் பங்கேற்றனர். இதே போல் வளத்தியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.