தைவான் நாட்டில் சடங்கு செய்வதாக கூறி கியூ என்ற கர்ப்பிணி பெண்ணின் கால்களுக்கு இடையில் பட்டாசுகளை கொளுத்தியதால் அப்பெண் படுகாயமடைந்து கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கோயில் பூசாரிகள் மீது வழக்கு தொடர்ந்த அவர், ரூ.25.6 லட்சம் பணத்தை இழப்பீடாக பெற்றுள்ளார். இந்த மூடநம்பிகையால் இதனால் தனது குழந்தையை இழந்தது மட்டுமன்றி, உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு வேலையையும் இழந்ததாக வேதனை தெரிவித்துள்ளார். தைவானில் பட்டாசுகள் வெடிப்பதால் தீய சக்திகள் வெளியேறி நன்மை நடக்கும் என மக்கள் நம்புகின்றனர்.