வேலூர் நகரம் - Vellore City

வேலூர்: மழையின் அளவு குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆலோசனை

வேலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் கடந்த காலங்களில் வேலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மற்றும் ‌ கன அளவு நேரங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் அவற்றின் நீர் இருப்பு விவரங்கள் குறித்தும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தீங்கினால் பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பது எங்கு தங்க வைப்பது அவர்களுக்கு செய்யப்பட்டு வரும் அத்தியாவசிய தேவைகளின் ஏற்பாடுகள் குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். கண்காணிப்பு அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் இடைப்பாடுகளை உடனடியாக கலைந்து ‌ பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகைகளில் நடவடிக்கை மேற்கொள்வதே முதல் பணியாக இருக்க வேண்டும். மாவட்டத்திலுள்ள ஏரிகள் முழு கொள்ளளவு நிறைந்துள்ள ஏரிகளின் மதகுகள் மற்றும் நீர் வெளியேறும் கால்வாய்கள் சீரான முறைகளில் பராமரிக்கப்பட்டுள்ளதா நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மின்சார வாரியம் நெடுஞ்சாலை துறை மற்றும் தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் துறைகளில் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் கண்காணிக்க வேண்டும். வட்டார கட்டுப்பாட்டு அறை எண்கள் மின்சார பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా