9 வருடம் ஆகியும் பணி நிரந்தரம் வழங்கவில்லை ஆட்சியரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் எம். ஆர். பி செவிலியர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் 2015ஆம் ஆண்டு முறையாக தொகுப்பூதிய செவிலியர்கள் ஆக பணியமர்த்தப்பட்டோம் இரண்டு வருடங்களில் பணி நிரந்தரம் செய்வதாக பணியானை வழங்கப்பட்டது. ஆனால் 9 வருடங்கள் ஆகியும் பணி நிரந்தரம் வழங்கப்படவில்லை. எனவே தொகுப்பு ஊதிய செவிலியர்களாக எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மனு அளித்து இருந்தனர்.