களர்பதி கிராமத்தை ஊராட்சியாக மாற்ற ஆட்சியரிடம் மனு.

80பார்த்தது
ஊராட்சியாக மாற்ற வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் அருகே குரும்பேரி ஊராட்சிக்கு உட்பட்ட களர்பதி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், பழைய களர்பதி, புதிய களர்பதி, காந்தி நகர், எம். ஜி. ஆர் நகர், தெக்குமேடு, மாம்பாக்கம் உள்ளிட்ட 10&க்கும் மேற்பட்ட பகுதிகளில் 3500&க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 2500&க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். களர்பதி கிராமத்தில் இருந்து அடிப்படை தேவைகளை நிறைவேற்ற குரும்பேரி ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மூனறரை கி. மீ. செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்கள் கிராமம் மேம்பாடு அடைய களர்பதி கிராமத்தை ஊராட்சியாக மாற்ற வேண்டும் என கூறியிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி