தீ விபத்தை கண்காணிக்க திருப்பத்தூர் ஆட்சியருக்கு அரசு உத்தரவு

50பார்த்தது
கிருஷ்ணகிரி மாவட்டம் வன்னிப்புரம் என்ற இடத்தில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் டாட்டா எலக்ட்ரிக்கல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு டாட்டா நிறுவனத்தின் நான்கு அடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது

பேங்க் என அழைக்கப்படும் கெமிக்கல் தயாரிக்கும் அந்த அலகில் கெமிக்கல் டேங்க் சுத்திகரிப்பு பணியின் போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் புகைமண்டலமாக காட்சி அளித்தது. இதன் காரணமாக ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 9 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் இங்கு பணியாற்றிய 11 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஓசூர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரையூ நேரடியாக பார்வையிட்டு நலம் விசாரித்தார். டாட்டா விபத்தில் ஏற்பட்ட தீ இவற்றில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கூடுதலாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தார்ப்பகராஜை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சனிக்கிழமை நேற்று (செப் 28) மாலை ஐந்து மணி அளவில் திருப்பத்தூர் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்தி