சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

84பார்த்தது
மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் அடையாள அட்டை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் புதியதாக ஐந்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள் பயனடைந்த பயனாளிகளுக்கு நினைவு பரிசு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைப்பாளருக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தார்ப்பகராஜ் வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகளின் இணை இயக்குனர் கண்ணகி, மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் சையத் அலி, மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி