பணம் மோசடி
லக்கிநாயக்கன்பட்டி அடுத்த பல்லப்பள்ளி கிராமத்தைச்
திருப்பத்தூர் மாவட்டம் லக்கிநாயக்கன்பட்டி அடுத்த மல்லபள்ளி பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தன் கணவர் மற்றும் உறவினருடன் சேர்ந்து நிறுவனம் ஒன்றை தொடங்கி முதலீட்டுக்கு 5 சதவீதம் மாத வட்டி தருவதாக கூறினார். இதை நம்பி நாங்கள் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தோம். 2 மாதங்கள் வரை முறையாக வட்டி வழங்கிய அந்நிறுவனத்தினர் அதன்பிறகு வட்டி, அசல் தரவில்லை. இதுதொடர்பாக போலீஸ் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகிய இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் ரூ. 65 லட்சம் வரை பணத்தை மோசடி செய்து உள்ளனர். எனவே, எங்கள் பணத்தைமீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.