அட்யா பட்யா போட்டியில் தமிழக அணி சாம்பியன்

54பார்த்தது
அட்யா பட்யா போட்டியில் தமிழக அணி சாம்பியன்
31-வது தேசிய அட்யா பட்யா போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தப் போட்டியை புதுச்சேரி அட்யா பட்யா சங்கம் மற்றும் அட்யா பட்யா ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை இணைந்து புதுச்சேரி ஆசிர்வதிக்கப்பட்ட மதர் தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடத்தியது. ஆடவர் இறுதிச்சுற்று போட்டியில் தமிழக அணி 13-12, 28-28, 13-11 என்ற புள்ளிகள் கணக்கில் புதுச்சேரி அணியை வீழ்த்தியது.

தொடர்புடைய செய்தி