*திருப்பத்தூர் அருகே கால்வாய் கழிவுநீர் செல்வதற்கு பாதை அமைக்காமலேயே அரைகுறையாக கல்வெட்டு அமைத்த நிர்வாகம். மூன்று மாத காலமாக சாலையின் நடுவே குழியை தோண்டி விட்டு அப்படியே வைத்திருப்பதால் பொதுமக்கள் குழியில் விழுந்து எழுந்து செல்லக்கூடிய அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல் அச்சமங்கலம் ஊராட்சி காளி வட்டம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கால்வாய் கழிவு நீர் வெளியேறி சென்று அருகாமையில் உள்ள ஏரி மற்றும் ஆற்றுப்படுகையில் கலப்பதற்காக திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பாக கல்வெட்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் காளி வட்டம் பகுதி வீடுகளில் இருந்து வெளியேறக்கூடிய கழிவு நீர் கல்வெட்டிற்கு அடியில் கடந்து செல்வதற்கு பாதை அமைக்காமலேயே கல்வெட்டு மட்டும் அரைகுறையாக கட்டி விட்டு சாலைகளின் நடுவிலும் ஓரங்களிலும் சுமார் 15 அடி நீளத்திற்கு குழியை தோண்டி வைத்துவிட்டு நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டு வருவதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வழியாகச் செல்ல வாகனங்களில் வரும் நபர்கள் பள்ளி மாணவ மாணவிகள் முதியோர்கள் அந்த குழியில் விழுந்து எழுந்து அடிபட்டு செல்லும் அபாய நிலை இருந்து வருகிறது.