போலியோவால் பாதித்த குழந்தைகள் நான்கு கிலோ எடை கொண்ட இரும்பு காலணிகள் (காலிபர்கள்) அணிந்து நடக்க சிரமப்படுவதை பார்த்த கலாம், அதற்கு மாற்று வழியை யோசித்தார். அக்னி ஏவுகணையில் பயன்படுத்தக்கூடிய ஒரு வகையான கார்பன் இழைகளைக் கொண்டு 400 கிராம் எடையில் காலணிகளை உருவாக்கினார். இதனால் மாற்றுத்திறனாளி குழந்தைகள் சிரமம் இல்லாமல் நடக்கத் தொடங்கினர். தனது வாழ்நாளிலேயே இந்த கண்டுபிடிப்பு தான் மனதிற்கு நெருக்கமானது என கலாம் பெருமிதத்துடன் கூறினார்.