திருப்பத்தூர்: உலக மனநல நாளை கேக் வெட்டி கொண்டாட்டம்

70பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து உலக மன நல நாளை முன்னிட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மன நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்ணை வைத்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து மனநலம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சை மறுவாழ்வு பயிற்சிகளால் குணப்படுத்த முடியும் என்று இப்பேரணியில் பங்கு பெற்ற மாவட்ட மனநல மருத்துவர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இப்பேரணியில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கண்ணன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கண்ணகி, மாவட்ட மனநல மருத்துவர் பிரபவராணி, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.

தொடர்புடைய செய்தி