*ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் பணியாற்றும் சுமார் 30க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு 12 மாத காலமாக மாத ஊதியம் கொடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா*
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுக்களை கொடுத்தனர்.
அப்போது ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர் பெண்கள் எங்கள் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 30 துவக்கப் பள்ளிகள் உள்ளன ஒவ்வொரு பள்ளிக்கும் ஒருவர் வீதம் 30 பேர் துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வருகிறோம் எங்களுக்கு மாத ஊதியமே 1220 ரூபாய் மட்டும் தான் அந்த ஊதியத்தை கூட கொடுக்காமல் 12 மாத காலமாக நிலுவையில் வைத்துள்ளனர் சம்பளம் கேட்க சென்றால் 10 வருடங்களுக்கு முன்பு கொடுத்த போனஸ் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்கள் நாங்கள் எத்தனை முறை மனு கொடுத்தாலும் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்று கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டாரங்கின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.