அஜித் குமார் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம் 2 நாள் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நேற்று முன்தினம் (ஏப்.10) வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படம், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் முதல் நாள் வசூலாக 30 கோடி ரூபாயை கடந்தது. இந்நிலையில், 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகளவில் 76.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது