கேவி குப்பம் - Kevi Kuppam

வேலூர்: விதிமீறிய 101 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்

வேலூர்: விதிமீறிய 101 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்

தீபாவளி பண்டிகை கடந்த 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. அதைத்தொடர்ந்து மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாகும். மேலும் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் 4 நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் தங்கியிருக்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு ரெயில், பஸ்களில் புறப்பட்டு சென்றனர். அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்து விட்டது. அதனால் பெரும்பாலானோர் அரசு, தனியார் பஸ்களில் குடும்பத்துடன் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர். இதனை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், அவ்வாறு வசூலிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வட்டார போக்குவரத்துத்துறை கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் சரக துணை வட்டார போக்குவரத்து கமிஷனர் பட்டாபசாமி மேற்பார்வையில் பள்ளிகொண்டா, வாலாஜா, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய சுங்கச்சாவடிகளின் அருகே சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது. மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 30-ந் தேதி இரவு முதல் நேற்று அதிகாலை வரை சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு சோதனையில் 959 ஆம்னி பஸ்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 101 பஸ்கள் போக்குவரத்து விதிகளை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பஸ்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்து 750 அபராதம் விதிக்கப்பட்டது.

வீடியோஸ்


నిర్మల్ జిల్లా