உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதிச் சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அல்ஜீரிய வீராங்கனையான இமானே கெலிஃப். இவர் மீது பாலினம் குறித்து புகார் எழுந்த நிலையில், பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், இமான் கெலிஃப்-க்கு ஆண்களுக்கு உரிய உடலமைப்புகள் மற்றும் மருத்துவ ரீதியான குணாதிசயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு கர்ப்பப்பை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.