திருவள்ளூர் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இன்று (நவ.5) சூட்கேஸில் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. இதில், ஆந்திராவைச் சேர்ந்த தந்தை, மகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலியல் தொழிலில் மகளை ஈடுபடுத்த முயன்றதால் கொலை செய்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், திடீர் திருப்பமாக நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொலை செய்துவிட்டு, சடலத்தை தமிழ்நாட்டில் விட்டுச் செல்ல முயன்றது தெரியவந்தது.