
பேரணாம்பட்டில் கூலி தொழிலாளிக்கு கத்திக்குத்து
பேரணாம்பட்டு ஏரிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் பொன்மணி (30) கூலித்தொழிலாளி. பிரவீன்குமார் ஆட்டோ டிரைவர். கடந்த ஏப்ரல் 14-ம் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பிரவீன்குமார் கத்தியால் பொன்மணியை முதுகில் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிரவீன்குமாரை கைது செய்தனர்.