
விநாயகபுரம் பேருந்து நிலையத்தை சீரமைக்க கோரிக்கை
குடியாத்தம் கூட்ரோடு என அழைக்கப்படும் விநாயகபுரத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தின் சீலிங் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் பேருந்து நிலையத்தில் அமரும் பயணிகளுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆகையால், பேருந்து நிலையத்தை உடனடியாக சரிசெய்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.